சென்னை சேத்துப்பட்டில் நடந்த ரமணா ஆஸ்ரமத்தின் 100வது ஆண்டு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா தனது ஆன்மிகப் பயணத்தைப் பகிர்ந்தார். ஆரம்பகாலத்தில் கடவுள் நம்பிக்கையில்லாமல் இருந்தவர், கம்யூனிச சித்தாந்தங்களுடன் கூட இருந்தார்.
“நான் என் அண்ணனுடன் சேர்ந்து கம்யூனிச கச்சேரிகளில் ஆர்மோனியம் வாசித்து, கடவுள் நம்பிக்கையில்லாமல் இருந்தேன்,” என்று அவர் குறிப்பிட்டார். சென்னைக்கு வந்து ஜி.கே. வெங்கடேஷ் போன்ற ஆன்மிக நம்பிக்கையாளர்களுடன் பணியாற்றியபோது, கடவுளைப் பற்றிய யோசனைகளைத் தவிர்த்தார்.
ஆனால், மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று கோவிலில் நுழைந்தபோது, அவரின் இதயத்தில் மின்னல் ஒருவழியாக பரவியது. “அந்த உணர்வு என்னவென்ற கேள்வி என் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருந்தது,” என அவர் கூறினார்.
மூகாம்பிகை தரிசித்த பிறகு, அவரது வாழ்வில் அற்புதங்கள் நிகழ்ந்தது. “அன்னக்கிளி படத்தில் இசையமைக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இது மூகாம்பிகையின் அருளால்தான்,” என அவர் கூறினார். இதுபோன்ற பல அற்புதங்கள் என் வாழ்வில் நடந்துள்ளன. கடவுளின் அருளால் இதெல்லாம் நடக்கிறது என்று நினைக்கிறேன்.