படங்களுக்கு இசையமைக்கும் இளையராஜா வெளிநாடுகளிலும், தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு திருநெல்வேலியில் அவர் நடத்திய கச்சேரி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனால் உற்சாகமடைந்துள்ள அவர், ஊர்தோறும் தனது கச்சேரி நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நெல்லை மக்களின் அன்பும் ஆதரவும் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியுள்ளது. நான் முன்பே பதிவிட்டபடி, விரைவில் ஒவ்வொரு ஊரிலும் எனது கச்சேரி நடைபெறும். அடுத்து எந்த ஊர்..?” என்று கேட்டுள்ளார்.