தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. அவரது இசையமைப்பில் கடைசியாக வெளியான படம் விஜய் நடித்த கோட், இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட். படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி, பல இசை நிகழ்ச்சிகளை நடத்துவதில் யுவன் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
இந்நிலையில், தனது தந்தை இளையராஜா தனது திருமணத்திற்கு வராததற்கான காரணம் குறித்து யுவன் பேசியுள்ளார். யுவன் 2015 இல் சப்ருன் நிசாவை மணந்தார், அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “எனது திருமணம் திடீரென்று நடந்தது, நான் ஊருக்குப் போகிறேன், மறுநாள் திருமணம்” என்று கூறியுள்ளார். மேலும், “அன்றைக்கு அப்பாவிடம் பேசும் போது, வரேன்’ என்று சொல்லிவிட்டு,ஆனால் நான் வந்தா எனக்காக என்னன்னு யோசேச்சி சங்கடப்படுவாங்க, அதனால் நான் வரவில்லை என்று சொல்லிவிட்டார்.
மேலும், “திருமணம் முடிந்து என்னை சந்திக்க வந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.