கதை திருட்டு சர்ச்சை என்பது தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடிகளில் புரளும் சினிமா உலகில், படங்கள் வெற்றிகரமாக ரிலீஸ் ஆன பிறகு, அந்த கதை யாருக்குச் சொந்தமானது என்பதற்கான மோதல்கள் தொடங்கி வருகின்றன. இதோ, கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய தமிழ் படங்களின் பட்டியல்:
ராஜா ராணி: அட்லீ இயக்கிய இப்படம், மணிரத்னத்தின் ‘மெளன ராகம்’ படத்தை காப்பியடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
மெட்ராஸ்: பா.இரஞ்சித் இயக்கிய இப்படம், இயக்குனர் கோபி நாயினார் தனது ‘கறுப்பர் நகரம்’ படத்தின் காப்பி எனக் கூறினார்.
மான்ஸ்டர்: இப்படத்தின் சில காட்சிகள் பத்திரிகையாளர் லதானந்தின் கதையிலிருந்து காப்பியடிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
கத்தி: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படம், கோபி நாயினார் எழுதிய கதையை காப்பியடித்ததாக சர்ச்சை எழுந்தது.
சர்கார்: விஜய் நடித்த இப்படம், வருண் ராஜேந்திரனின் ‘செங்கோல்’ கதையை பயன்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
96: பிரேம் குமார் இயக்கிய இப்படம், ‘நீ நான் மழை’ என்கிற கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக புகார் வந்தது.
கேப்டன் மில்லர்: அருண் மாதேஸ்வரன் இயக்கிய இப்படம், வேல ராமமூர்த்தியின் ‘பட்டத்து யானை’ நாவலை தழுவி எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
எந்திரன்: ஷங்கர் இயக்கிய இப்படம், ஆரூர் தமிழ் நாடனின் கதையை திருடி எடுக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.
வலிமை: ஹெச்.வினோத் இயக்கிய இப்படம், ‘மெட்ரோ’ படத்தின் கதையை காப்பியடித்ததாக புகார் வந்தது.
மகாராஜா: விஜய் சேதுபதி நடித்த இப்படம், மருதமுத்துவின் ‘அத்தியாயம் ஒன்று’ குறும்படத்தை காப்பியடித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
வாழை: மாரி செல்வராஜ் இயக்கிய இப்படம், சோ தர்மனின் சிறுகதையை ஒத்து இருப்பதாக சர்ச்சை கிளம்பியது.