மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கிய ‘எம்புரான்’ மார்ச் 27 அன்று வெளியானது. இதில் 2002 குஜராத் கலவரத்தை அடிப்படையாகக் கொண்ட சில காட்சிகள் இடம்பெற்றிருந்தன. வில்லனுக்கு ‘பாபா பஜ்ரங்கி’ என்று பெயர் வைத்துள்ளனர். சில இடங்களில் ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் வசனங்கள் இருப்பதாகவும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து படத்தின் 3 நிமிட உரையாடல் காட்சிகள் நீக்கப்பட்டன. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலன் வீட்டில் அமலாக்க இயக்குனரகம் அதிரடி சோதனை நடத்தியது. இதையடுத்து ‘எம்புரான்’ படத்தின் இயக்குநருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், படத்தின் மற்றொரு தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூருக்கு நேற்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ‘லூசிபர்’, ‘மரைக்காயர்’ படங்களின் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்த விவரம், துபாயில் மோகன்லாலுக்கு ரூ.2.5 கோடி பணம் வாங்கியது போன்ற விவரங்களைக் கோரி ‘எம்புரான்’ படத்தின் வெளிநாட்டு உரிமை விவரங்களைக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.