ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் தொடர்ச்சியாக 2017ஆம் ஆண்டு இந்தியன் 2 படத்தின் வேலைகள் தொடங்கின. படப்பிடிப்பு 2020ஆம் ஆண்டு துவங்கியதும், நட்சத்திர நடிகர்கள் கலந்து கொண்டனர். ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக படம் நிறுத்தப்பட்டது.

பின்னர் 2022ஆம் ஆண்டு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது.இந்தியன் 2 படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, இந்தியன் 3 காட்சிகளும் முன்னமே படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்தியன் 2, 2024ஆம் ஆண்டு வெளியானபோது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
விமர்சனங்கள் கடுமையாக இருந்தன. இதனால் இந்தியன் 3 ரத்து செய்யப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.அதற்கிடையில் ஷங்கர், இது திரைக்கு வரும் என்று உறுதி அளித்தார்.
தற்போது அவர் லைகா நிறுவனர் சுபாஷ்கரனை சந்தித்து, இந்தியன் 3 குறித்து விவாதித்துள்ளார். மீதமுள்ள படப்பிடிப்பு, சம்பளம், வெளியீட்டு தேதிகள் போன்றவை பற்றி பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது படத்தை மீண்டும் தொடங்கவுள்ளதாக அறியப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.