தனுஷ் நடிப்பில் உருவாகிய ‘இட்லி கடை’ படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கு முன் அவர் நடித்த ‘குபேரா’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சினிமாவிலிருந்து விலகிய நிலையில், அவருடைய மகனான இன்பன் உதயநிதி ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இணைந்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

‘இட்லி கடை’ படத்தின் திரையரங்கு விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தில் தனுஷ் இயக்கி நடித்து, நித்யா மேனன் மற்றும் அருண் விஜய், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்த ‘இட்லி கடை’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியானது. வரும் அக்டோபர் 1ஆம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. கலைஞர் டிவி நிறுவனம் சாட்டிலைட் உரிமையை பெற்றுள்ளதாகவும் குறிப்பிடத்தக்கது.