கேரளா: மோகன்லால் நடித்த வருஷபா படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு மோகன்லால் நடித்த ஹிருதயபூர்வம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து மோகன்லால் அடுத்ததாக வருஷபா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இது ஒரு பான் இந்தியா காவியமாக உருவாகி வருகிறது. மோகன்லால் உடன் ஷனயா கபூர், ஜாரா கான், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ரகினி துவேவிடி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் டீசரை வரும் 18ம் தேதி வெளியிடுவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
இப்படத்தை நந்தா கிஷோர் இயக்கியுள்ளார். படத்தின் இசையை சாம் சி.எஸ். மேற்கொண்டுள்ளார்.