‘இன்டர்ஸ்டெல்லர்’ என்பது ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 2014-ம் ஆண்டு வெளியான அறிவியல் புனைகதை திரைப்படம். மேத்யூ மெக்கானாஹே, அன்னி ஹாத்வே, ஜெசிகா சாஸ்டைன் மற்றும் பில் இர்வின் ஆகியோர் நடித்த இந்தப் படம் உலகளவில் பாராட்டைப் பெற்றது.

இந்த எதிர்காலத் திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி அதன் 10-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் உலகம் முழுவதும் மீண்டும் வெளியிடப்பட்டது. இருப்பினும், இந்தியாவில் ‘புஷ்பா 2’ காரணமாக, ஐமாக்ஸ் உட்பட போதுமான திரையரங்குகள் இல்லாததால் இது வெளியிடப்படவில்லை. இது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. இந்த சூழ்நிலையில், வார்னர் பிரதர்ஸ் இந்தியா படம் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.