சென்னை: நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக காட் ஆஃப் லவ் படத்தில் நடிகை மிருணாள் தாக்கூர் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிலம்பரசன் தற்போது இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் அரசன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். வடசென்னை கதையுடன் தொடர்புடைய கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது.
அடுத்ததாக, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு காட் ஆஃப் லவ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இப்படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை மிருணாள் தாக்கூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.