‘ஆவேசம்’ படத்தின் இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கும் அடுத்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதன் ஆரம்ப கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. சூர்யா தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம் இதை தயாரிக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யா இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் சூர்யாவுடன் ஃபஹத் ஃபாசில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. மேலும், சூர்யாவுடன் நடிக்க நஸ்ரியாவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ‘ஆவேசம்’ படத்தின் மூலம் ஜீத்து மாதவனும் ஃபஹத் ஃபாசிலும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர்.

இதன் அடிப்படையில் ஃபஹத் ஃபாசில், நஸ்ரியா மற்றும் பலர் இதில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் சூர்யா தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும். அதை முடித்த பிறகு, அவர் ஜீத்து மாதவன் படத்தில் கவனம் செலுத்துவார். தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதிகளில் இதைப் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.