சென்னை: மலையாள சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் கிறிஸ் வேணுகோபால் மற்றும் நடிகை திவ்யா ஸ்ரீதர் சமீபத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். இருவரும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளனர். தொலைக்காட்சி தொடர்களிலும் இணைந்து நடித்துள்ளனர். இதன் மூலம் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு காதலித்து வந்தனர்.
கிறிஸ் வேணுகோபால் பெரும்பாலும் தாத்தா வேடங்களில் நடிக்கிறார். திவ்யா ஸ்ரீதர் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த திருமணத்தில் இரு குழந்தைகளும் கலந்து கொண்டனர். இந்நிலையில், திருமண விழாவில் கிறிஸ் வேணுகோபால் நீண்ட வெள்ளை தாடியுடன் திவ்யா ஸ்ரீதருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அதன்பிறகு, சிலர் தங்கள் வயது உள்ளிட்ட விஷயங்களை சமூக வலைதளங்களில் கிண்டலாகப் பதிவு செய்தனர். இதுகுறித்து நடிகை திவ்யா ஸ்ரீதர் கூறுகையில், ‘நாலு பேருக்கு கல்யாணம்னு அறிவிக்க விரும்பினோம். இருப்பினும், பல கருத்துக்கள் பாசிட்டிவாக இல்லை. திருமணம் செய்வது அவ்வளவு பெரிய தவறா? எங்கள் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம்.
நல்ல கருத்துக்களை எதிர்பார்க்கிறோம். ஆனால் இதுபோன்ற மோசமான கருத்துக்கள் வரும் என்று நான் நினைக்கவே இல்லை. நாங்கள் உடலுறவுக்காக திருமணம் செய்து கொள்ளவில்லை. நான் என் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க விரும்புகிறேன். அவர்களுக்கு தந்தை தேவை. என் கணவர் என்று கூற எனக்கு ஒரு அடையாளம் வேண்டும்.
உடலுறவு மட்டுமே வாழ்க்கை என்று எங்காவது எழுதிவைத்திருக்கிறார்களா?’ என்று ஆவேசமாகக் கேட்டார்.