ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தில் கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கலந்து கொண்ட நிலையில், கத்ரீனா கர்ப்பமாக இருக்கிறாரா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கத்ரீனா கைஃப். பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கான், ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன், அக்ஷய் குமார், ரன்பீர் கபூர், என பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். திரையுலகில் சில தோல்விகளை சந்தித்தாலும், பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்து பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இவர் சமீபத்தில் இந்தி மற்றும் தமிழ் படமான மெர்ரி கிறிஸ்மஸ் படத்தில் நடித்துள்ளார்.
இதற்கிடையில், கத்ரீனா கைஃப் மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் 2021 இல் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், இருவரும் திருமணம் செய்யும் வரை தங்கள் காதல் உறவைப் பற்றி திறக்கவில்லை. திருமணத்திற்கு பிறகு பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளில் விக்கி கவுஷல் – கத்ரீனாவும் ஒருவர் கத்ரீனாவும் விக்கியும் திருமணம் செய்து கொண்டதில் இருந்தே கத்ரீனா கர்ப்பமாக இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் தம்பதியினர் அதையெல்லாம் மறுத்து வந்தனர்.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தில் கத்ரீனாவும், விக்கி கவுஷலும் கலந்து கொண்டனர். கத்ரீனா எப்போதும் போல் சிவப்பு நிற புடவையில் அழகாக இருந்தார். விக்கி கௌஷல் வெள்ளை நிற குர்தா-பைஜாமா செட் அணிந்திருந்தார். கத்ரீனா – விக்கி கவுஷலின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கத்ரீனா கைஃப் கர்ப்பமாக இருக்கிறாரா என்று சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். கத்ரீனாவின் வயிறு சற்று பெரிதாக இருப்பதால் அவர் கர்ப்பமாக இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விக்கி கௌஷல் தற்போது தனது புதிய படமான பேட் நியூஸ் படத்தின் புரமோஷன் பணிகளில் பிஸியாக உள்ளார். அப்போது கத்ரீனா கர்ப்பமாக இருப்பதாக தொடர்ந்து வரும் வதந்திகள் குறித்து ஒரு நிருபர் விக்கி கவுஷலிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அவர் பேட்டியளித்த நபரிடம் இந்தக் கேள்வியைக் கேட்கும்போது ஏன் வெட்கப்படுகிறீர்கள் என்று கேட்டார். நல்ல செய்தி வந்தால் அனைவருக்கும் தெரிவிப்பேன் என்றார்.