ஹைதராபாத்: தென்னிந்திய சினிமாவின் வசீகரமான ஹீரோக்களில் விஜய் தேவரகொண்டாவும் ஒருவர். இவருக்கு பெண் ரசிகர்கள் அதிகம். இவர் யாரை காதலிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அதனால், திருமணம் பற்றிய வதந்திகளும் வந்தன. தற்போது சாஹிபா என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார்.
இதற்கிடையில், அவர் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் கிசுகிசுக்கப்பட்டார். அதன்படி, இருவரும் ஜோடியாக சுற்றித்திரியும் புகைப்படங்களும், ஹோட்டல்களில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் படங்களும் வெளியாகி வைரலானது. இதற்கிடையில் இருவரும் காதலிப்பதாக ஒப்புக்கொண்டனர்.
பின்னர், விஜய் தேவரகொண்டா குடும்பத்தினருடன் ராஷ்மிகா ‘புஷ்பா 2’ படத்தை பார்க்க தியேட்டருக்கு செல்லும் வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் ராஷ்மிகாவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், இன்னும் 6 மாதங்களில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது.