தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் தளபதி விஜய். தற்போது ஒரு படத்துக்கு ரூ.250 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இத்தனை கோடிகள் சம்பாதித்தாலும் விரைவில் சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தளபதி 69 தான் நடிகர் விஜய்யின் கடைசி படம். இப்படத்திற்கு பிறகு விஜய் சினிமாவில் இருந்து ஒதுங்கி முழு நேர அரசியலில் குதிக்க உள்ளார்.
தற்போது அவர் நடித்த கோட் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், லைலா, சினேகா என பெரும் நட்சத்திர பட்டாளமே உள்ளது.
தளபதி 69, கோட் படத்திற்கு பிறகு விஜய் கடைசியாக நடித்த படம், எச்.வினோத் இயக்கத்தில்உருவாக உள்ளது. படத்திற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது அரசியல் படமாக உருவாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் தொடங்கவிருக்கும் புதிய தொழில் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
இதன்படி சில மாதங்களுக்கு முன்பு புதிய திரையரங்கம் கட்டப் போவதாக தகவல் வெளியானது. இது எங்கு கட்டப்பட உள்ளது என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அந்த தியேட்டரை நடிகர் விஜய் புதுச்சேரியில் கட்டவுள்ளார். மேலும் இந்த தியேட்டர் விஜய்யின் வலது கை புஸ்ஸி ஆனந்த் மேற்பார்வையில் கட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.