சென்னை: நானும் ஒரு காலக்கட்டத்தில் லூசராக இருந்திருக்கிறேன் என்று இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறியுள்ளார்.
2019ம் ஆண்டு வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படத்திலேயே வெற்றி இயக்குனராக முத்திரை பதித்தார்.
இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் 2022ல் வெளிவந்த திரைப்படம் லவ் டுடே. இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
லவ் டுடே படத்தை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். அதன்படி, இவர் கைவசம் தற்போது Love Insurance Kompany மற்றும் ட்ராகன் ஆகிய படங்கள் உள்ளன. இந்நிலையில், குறும்படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதீப் பல விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.
அதில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் வெளியாக சற்று தாமதமாகும். படத்தின் சிஜி வேலைகள் அதிகமான காலத்தை எடுத்துக் கொள்கிறது.
”குறும்பட போட்டியில் நான் கலந்து கொண்டுள்ளேன். ஆனால், என் படைப்பு அங்கு வெற்றி பெறவில்லை.” ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதால் மற்றவர்கள் அனைவரும் லூசர்கள் என்று தான் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.”
”அப்படி பார்த்தால் நானும் ஒரு காலக்கட்டத்தில் லூசராக இருந்திருக்கிறேன். அதனால் அவற்றை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம் அது உண்மை இல்லை” என்று கூறியுள்ளார்.