ஜெய், யோகி பாபு மற்றும் ரீஷ்மா நானய்யா நடிக்கும் படத்திற்கு ‘ஒர்க்கர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
வினய் கிருஷ்ணா இயக்கியுள்ள இதில் நாகினீடு, பரத் கல்யாண், பிரவீணா, ஸ்ரீஜா ரவி, சசி லயா மற்றும் வெங்கட் செங்குட்டுவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

பிரிமுக் பிரசண்ட்ஸ் என்ற பதாகையின் கீழ் எம். ஷோபனா ராணி இதைத் தயாரிக்கிறார். அஞ்சி ஒளிப்பதிவை கையாள்வார், ஜிப்ரான் இசையமைக்கிறார்.
படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டனர். படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கும்.