நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் முத்துவேல் பாண்டியன் என்ற சிறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்திருந்தார். இதையடுத்து அதன் அடுத்த பாகம் ‘ஜெயிலர் 2’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் வெளியான இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. முதல்கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.