
ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியானது. அதே நாளில் கிறிஸ்டோபர் நோலனின் ‘இன்டர்ஸ்டெல்லார்’ படமும் மீண்டும் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ‘இன்டர்ஸ்டெல்லருக்கு’ IMAX திரையரங்குகள் கிடைக்கவில்லை. அனைத்தும் ‘புஷ்பா 2’ படத்திற்காக ஒதுக்கப்பட்டது.
இதற்கு பலரும் எதிர்மறையாக கருத்து தெரிவித்து வந்தனர். அனைத்து ஐமேக்ஸ் திரையரங்குகளும் கமர்ஷியல் படத்துக்கானது என்று இந்த விவகாரத்தில் கருத்துகள் எழுந்தன. இந்த விவகாரம் குறித்து ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “‘புஷ்பா 2’ கூட சினிமாதான்.

மேற்கத்திய திரைப்படங்களை உயர்த்துவதற்கும், நம் சொந்த நாட்டிலிருந்து தகுதியற்ற விஷயங்களை கீழே போடுவதற்கும் நாம் ஏன் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். இந்த வேரூன்றிய படைப்புகளை மற்ற நாடுகள் பாராட்டி நம் சினிமாக்களைப் பார்த்து வியக்கிறார்கள். ஆனால் நாமே வெட்கப்படுகிறோம் என்பது வேதனையான விஷயம்,” என்றார்.
‘புஷ்பா 2’ படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. ‘புஷ்பா 2’ விரைவில் இந்தியாவில் அதிக வசூல் செய்யும் படமாக மாறும் என வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.