சென்னை: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் படத்தின் ஹீரோயின் இவரா..? என்று கோலிவுட் வட்டாரத்தினர் ஆச்சரியப்படுகின்றனர். அவர் யார் தெரியுங்களா?
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகி தனக்கு என்று ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் எஸ்.ஏ சந்திரசேகர். இவருடைய மகன் என்று அடையாளத்தோடு சினிமாவிற்குள் இறங்கியவர் தான் விஜய்.
தற்போது சினிமாவிலிருந்து முழுவதுமாக விலகி அரசியலில் களமிறங்கியுள்ளார். இந்த நேரத்தில் சஞ்சய் தந்தை போல இல்லாமல் தன்னுடைய தாத்தாவைப் போல இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு இறங்கி இருக்கிறார்.
சஞ்சய் தனது முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பில் எடுக்க உள்ளார். தன்னுடைய படத்தின் ஹீரோவை தேர்வு செய்ய நேரம் எடுத்த சஞ்சய் பட அறிவிப்பு வந்து பல மாதங்களுக்கு பிறகு தான் ஹீரோ யார் என்ற தகவல் வெளிவந்தது.
இந்த நிலையில் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் ஹீரோயின் பரியா அப்துல்லா. இவர் 2021 ஆம் வருடம் ஜதி ரத்னாலு என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் என்று குறிப்பிடத்தக்கது. இத்தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.