சென்னை: திருமண வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகளைத் தொடர்ந்து, நடிகர் ஜெயம் ரவி என்ற ரவி மோகன் தற்போது திரையில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். தனது பெயரிலேயே “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, ‘ப்ரோகோட்’ என்ற புதிய திரைப்படத்தை தயாரித்து, அதில் ஹீரோவாகவும் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு நான்கு ஹீரோயின்கள் இடம்பெற உள்ளனர் என்ற தகவல் சினிமா வட்டாரத்தில் பரவியுள்ளது.

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக 1993 ஆம் ஆண்டு அறிமுகமான ரவி மோகன், 2003-ம் ஆண்டு அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து எந்தவொரு சர்ச்சைகளுக்கும் இடம் அளிக்காமல், சீரான நடிப்புடன் முன்னேறியவர். குடும்ப வாழ்வில் ஏற்பட்ட சிக்கல்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் தனது திரை வாழ்க்கையை உறுதியாக கட்டியெழுப்ப முயற்சிக்கிறார்.
ரவி மோகனும், அவரின் மனைவியும் விவாகரத்து தொடர்பாக வழக்கில் இருந்த நிலையில், அவர் கூறிய குற்றச்சாட்டுகள், எதிர்ப்புகள் என பல விவாதங்களுக்கு வழிவகுத்தன. இவற்றின் நடுவே கெனிஷா என்ற நடிகையுடன் அவரது நெருக்கம் குறித்து செய்திகள் வெளியாக, இருவரும் அதுபற்றி பேச மறுத்தனர். பின்னர் ஜெயம் ரவி மற்றும் கெனிஷா இணைந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதுதான் சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியது. அதன் பின்னர் நீதிமன்றம் அவர்களுக்கிடையிலான கருத்து மோதல்களை நிறுத்துமாறு உத்தரவிட்டது.
இவற்றை எல்லாம் புறக்கணித்து, ரவி தனது திரை வாழ்க்கையை மீண்டும் எழுப்ப முயற்சிக்கிறார். ப்ரோகோட் என்ற இந்த புதிய படத்தை, டிக்கிலோனா மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கவுள்ளார். படத்தில் பிளேபாய் கேரக்டரில் ரவி நடிக்கிறார் என்பதும், இதுதான் அவர் இதுவரை ஏற்காத புதிய முயற்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்திற்காக காயடு லோகர் மற்றும் ரஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. மேலும் படத்தின் பட்ஜெட் பல கோடி ரூபாயாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கியமாக, நடிகர் எஸ்.ஜே. சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது, படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
சினிமாவில் மீண்டும் தனது இடத்தை உறுதிப்படுத்தும் முயற்சியில் இருக்கும் ரவி மோகன், இந்த படத்தின் மூலம் தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட சர்ச்சைகளை கடந்துவிட்டு, திரையில் புதிய உச்சத்தை நோக்கிச் செல்கிறார்.