ஐதராபாத்: பொறாமை மிக மோசமானது குணம் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இந்நிலையில், நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இது குறித்த கேள்விக்கு நடிகை சமந்தா பதிலளிக்கையில் , “தனக்கு எப்போதும் பொறாமை இருந்தது இல்லை” என தெரிவித்துள்ளார். மேலும், “என்னிடம் பொறாமை இருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அது மிகவும் மோசமானது” என அவர் தெரிவித்துள்ளார்.