பா.ரஞ்சித் தயாரிக்கும் வெப் சீரிஸில் ஜான்வி கபூர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நெட்ஃபிக்ஸ் பல்வேறு வெப் சீரிஸ்களை தயாரித்து வருகிறது. தற்போது தமிழில் புதிய வெப் சீரிஸ் தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. பா.ரஞ்சித் தயாரித்து நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்திற்கு வழங்குவார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த தொடரை ‘களவாணி’ படத்தை இயக்கிய சற்குணம் இயக்குகிறார். ஜான்வி கபூர் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஜூனியர் என்டிஆர் நடித்த ‘தேவாரா’ படத்தின் மூலம் தென்னிந்தியத் திரையுலகில் அறிமுகமானவர் ஜான்வி கபூர். படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதைத் தொடர்ந்து ராம் சரண் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தமிழில் இவர் நடிக்கும் முதல் வெப் சீரிஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜான்வி கபூர் இதுவரை தமிழில் எந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. முதன்முறையாக வெப் சீரிஸ் ஒன்றிற்கு ஒப்புக்கொண்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.