ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய 1993-ம் ஆண்டு வெளியான படம், ஜுராசிக் பார்க். இந்த படம் உலகளவில் மிகவும் பிரபலமானது. அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. பின்னர் ஸ்பீல்பெர்க் இந்த படங்களை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில், யுனிவர்சல் இப்போது ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த்தின் படத்தை உருவாக்கியுள்ளது. கேரத் எட்வர்ட்ஸ் இயக்கிய இதில் ஸ்கார்லெட் ஜோஹன்சன், ஜொனாதன் பெய்லி மற்றும் மஹெர்ஷாலா அலி ஆகியோர் நடிக்கின்றனர்.
சர்வைவல் த்ரில்லர் கதையைக் கொண்ட இந்த படம் ஜூலை 4-ம் தேதி வெளியாகிறது. ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.