தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால், முன்னணி நடிகர்களுடன் பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான படங்களில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.
கடந்த லாக்டவுனில், காஜல் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர், அவர் கர்ப்பமாகி இதைக் கருதி தனது ரசிகர்களுடன் தன் கர்ப்பகால புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். சமீபத்தில், காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தைக்கு பிறந்ததை அறிவித்தனர். அந்த குழந்தைக்கு “நீல்” என்று பெயர் வைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, காஜல் இதுவரை தனது குழந்தையின் முகம் மறைத்துக்கொண்டே புகைப்படங்களை பகிர்ந்திருந்த நிலையில், சமீபத்தில் தனது குழந்தையின் முகத்தை முதன்முறையாக பகிர்ந்துள்ளார்.