பாலிவுட் நடிகை கஜோல் “தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே”, “குச் குச் ஹோதா ஹை”, “கபி குஷி கபி கம்” போன்ற கிளாசிக் படங்களில் நடித்துள்ளார். முதன்முறையாக தமிழில் “மின்சார கனவு” படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு “வேலையில்லா பட்டதாரி-2”படத்தில் நடிந்திருந்தார். தமிழில் இரண்டே படங்களில் நடித்தாலும், கஜோலுக்கு தமிழகத்தில் தனக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சமீபகாலமாக சில படங்களில் நடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
நடிக்க விருப்பமில்லை என்று கஜோல் கூறியுள்ளார். 18 வயதில், அவர் நடிப்பை நிறுத்த முடிவு செய்தார். இருப்பினும் தொடர்ந்து நடிக்க ஷாருக்கான் உதவியதாகவும் கூறியுள்ளார்.
“பல வருடங்களுக்கு முன்பு ‘உதர் கி ஜிந்தகி’ படத்தில் நடித்தேன். அப்போது எனக்கு வயது 17 அல்லது 18. பிறகு நடிப்பதை விட்டுவிடலாம் என்று நினைத்தேன்.
அப்போது ஷாருக்கான் என்னிடம், ‘நீ எப்படி நடிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்வாய்’ என்று கூறினார். இதுவே என்னைத் தொடர்ந்து நடிக்கத் தூண்டியது” என்கிறார் கஜோல்.