பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் மூன்றே நாட்களில் ரூ.500 கோடியை தாண்டியுள்ளது.
தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த கல்கி 2898 AD. தீபிகா படுகோன், திஷா பதானி, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் பல இந்திய நடிகர்கள் இதில் நடித்துள்ளனர்.
மகாபாரதம் முடிந்து கலியுகம் பிறந்து 6 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பதாக இந்தக் கதை காட்டப்பட்டுள்ளது. கல்கியின் அவதாரத்துக்காக மக்கள் காத்திருக்கும் போது அங்கு நடக்கும் சம்பவங்கள்தான் கதை. மகாபாரதத்தில் அழியா சாபம் பெற்ற அஸ்வத்தாமாவாக அமிதாப் பச்சன் நடித்துள்ளார். ராஜமௌலி, விஜய் தேவர்கொண்டா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இதனால் இந்த படத்தின் வரவேற்பு அதிகரித்து வசூலிலும் கலக்கி வருகிறது. படம் வெளியாகி 3 நாட்களில் ரூ.415 கோடி வசூல் செய்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்னும் சில நாட்களில் இந்தியத் திரையுலகில் 1000 கோடியைத் தாண்டிய படங்களின் பட்டியலில் கல்கியும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.