பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி மற்றும் பலர் நடித்துள்ள கல்கி படத்தை நாக் அஸ்வின் இயக்கி வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களைக் கொண்ட இந்தப் படத்தின் முதல் பாகம் ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வசூலைக் குவித்தது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், படம் ஆரம்பம் முதலே வசூலை அள்ளியது. இந்நிலையில், வசூல் 1000 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் பாகுபலி 2 படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக 1000 கோடி வசூல் செய்த முதல் தென்னிந்திய ஹீரோ என்ற பெருமையை பிரபாஸ் பெற்றார்.
இந்நிலையில் கல்கி படம் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கல்கிதம் மடாதிபதி பிரமோத் கிருஷ்ணம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், “புராணங்களில் கல்கி அவதாரம் பற்றி கூறப்பட்டதற்கு மாறாக கல்கி படத்தில் காட்டப்பட்டுள்ளது” என்று நடிகர்கள் பிரபாஸ், அமிதாப் பச்சன், இயக்குநர் நாக் அஸ்வின் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.