சென்னை : நடிகர் மணிகண்டன் நடித்து வசூல் மற்றும் விமர்சனத்தில் சிறப்பான இடம் பெற்ற ‘குடும்பஸ்தன்’ படக்குழுவை நேரில் அழைத்து நடிகர் கமல் பாராட்டியுள்ளார்.
மணிகண்டன் நடிப்பில் உருவாகி, கடந்த 24ம் தேதி வெளியான படம் ‘குடும்பஸ்தன்’. ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருந்த இப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படம் நடிகர் மணிகண்டனுக்கு மிகப் பெரிய பெயரை பெற்று தந்துள்ளது. இந்த ஆண்டில் சிறப்பான வசூல் பெற்ற படங்களில் இந்த படமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், ‘குடும்பஸ்தன்’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் தனது X தளத்தில் வெளியிட்டுள்ளது.