தமிழ் சினிமாவில் எந்த ஒரு புதிய ட்ரெண்ட் ஏற்பட்டாலும், அதன் பின்புலத்தில் கமல்ஹாசனின் பங்கு மறுக்க முடியாதது. தமிழ் சினிமாவுக்கான பல தொழில்நுட்பங்களை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவரும், வெளிநாடுகளில் தமிழ் படங்களின் வியாபாரத்தை விரிவுபடுத்தியவரும் அவர் தான்.

இப்போது தமிழ் திரைப்படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் தமிழ்நாட்டுக்குள் நடந்து வருகிறன. சில ப்ரோமோஷன்கள் மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளில் நடத்தப்படுவதும் வழக்கம். ஆனால், தற்போது கமல்ஹாசன் ஒரு புதிய முயற்சியாக ‘தக்லைப்’ படத்தின் ப்ரோமோஷனை கண்டம் தாண்டி ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிட்டுள்ளார்.
தக்லைப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆஸ்திரேலியாவில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு வசிக்கும் தமிழர்களை ஒருங்கிணைத்து மிக பிரமாண்டமாக நிகழ்ச்சி நடத்தப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முயற்சியின் மூலம் தமிழ் சினிமா ஆஸ்திரேலியாவில் புதிய வியாபார வாய்ப்புகளைத் தேடப் போவதாகவும், இதை தொடக்கமாக்கும் நபராக கமல்ஹாசன் உருவெடுக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.