நாயகன் என்ற கல்ட் கிளாசிக் படத்தை வழங்கிய கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி 35 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
இந்தப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார், மேலும் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் இந்த படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படம் ஜூன் மாதம் 5-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில், படத்தின் முதல் தனிப்பாடல் சமீபத்தில் ரிலீசானது. இந்த நிகழ்ச்சியில், இயக்குனர் மணிரத்னம் தனது அனுபவத்தை பகிர்ந்து, “பல ஆண்டுகளுக்குப் பிறகு கமல் சாருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அவர் சிறந்த நடிகர் என்பதும், சினிமாவை எவ்வளவு நேசிக்கிறார் என்பதும் உலகத்துக்கே தெரியும். அவரிடம் இருந்து பல விஷயங்களை அறிந்து கொண்டேன். கமல் சார் நம் படத்தில் இருக்கிறார் என்றாலே இயக்குனர்களுக்கு 50 சதவீதம் சுமைக் குறைந்து விடும்” என்று கூறினார்.
இந்த புதிய கூட்டணி, படத்திற்கான எதிர்பார்ப்புகளை மேலும் உயர்த்தியுள்ளது.