சென்னை: ஏஐ எனப்படும் அதிநவீன தொழில்நுட்பம் உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதைப் படிக்க அமெரிக்கா சென்ற கமல்ஹாசன், சான்பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்ட Perplexity AI இன் CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸை சந்தித்து AI தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்தார்.

இது குறித்து கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட பதிவில், ‘சினிமாவில் இருந்து சிலிக்கான் என எல்லாமே மாறிவிட்டன. கருவி மாறலாம். ஆனால் அடுத்து வருவது மாறாது. இதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல்தான் என்னை பர்ப்ளெக்சிட்டி ஏஐ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றது’ என்று குறிப்பிட்டுள்ளார். அரவிந்த் ஸ்ரீனிவாஸ் கூறும்போது, ‘கமல்ஹாசனை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றார்.