மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கமல் என்ன பேசப்போகிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் கமல் நடிகர் நானியை பற்றிப் பேசியதைக் கொண்டு தற்போது இணையத்தில் பேசப்படுகின்ற ஒரு வைரல் நிகழ்வு உருவாகியுள்ளது.

நானி, ‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பிரபலமான தெலுங்கு நடிகர். சமீபத்தில் ‘ஹிட் 3’ திரைப்படத்துக்கான புரமோஷனுக்காக சென்னை வந்திருந்த அவர், பல ஊடகவியலாளர்களுக்கு பேட்டி வழங்கினார். அந்த பேட்டிகளில் ஒன்றில் கமலின் ‘விருமாண்டி’ படத்துக்காக அவர் காட்டிய நடிப்புத்திறனைப் பற்றி நானி பெருமையாக பேசியிருந்தார்.
விருமாண்டி திரைப்படத்தில் நீதிமன்றக் காட்சிகளில் கமல் நடித்த விதம், குறிப்பாக அவர் தூங்கி எழுந்து விசாரணைக்கு வருவதைப் போன்று தோற்றம் மாறும் அசைவுகள், நானிக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும், அதை எத்தனை முறை பார்த்தாலும், அந்த அளவுக்கு நடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து ‘தக் லைஃப்’ புரமோஷனில், மற்ற நடிகர்கள் அவரை பின்பற்றி நடிப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கமல், நானியின் பெயரைக் குறிப்பிட்டு “நன்றி நானி என்று சொல்லுவது விட, நானி என்பது பெரியது” என பதிலளித்தார். இந்தக் கருத்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இதைக் கேட்ட நானி, தனது எக்ஸ் (முந்தைய ட்விட்டர்) தளத்தில் “போதும் சார், போதும்” என ஒரு எளிய ஆனால் உணர்ச்சிபூர்வமான பதிப்பை பகிர்ந்துள்ளார். கமல் தனது பெயரை அங்கீகரித்து பேசியது தான் பெருமையாக இருப்பதாக இந்த பதிவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இதே நேரத்தில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், கமல் தமிழ் மொழியை வைத்து தான் கன்னடம் உருவானது என்ற வகையில் பேசியது, கர்நாடகா மாநிலத்தில் பெரும் எதிர்ப்பை எழுப்பியுள்ளது. சில கன்னட அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
ஆனால் கமல் திட்டவட்டமாக தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என அறிவித்துள்ளார். இதனால் ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் இணையத்தில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.