கன்னடத்தில் நடிகர்கள், குழுவினர் அல்லது தொழில்நுட்ப உதவி இல்லாமல் முழுக்க முழுக்க AI தொழில்நுட்பத்தில் ஒரு படம் எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள சித்தஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மா மூர்த்தி. கிராஃபிக் டிசைனர் நூதனுடன் இணைந்து நரசிம்ம மூர்த்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
‘லவ் யூ’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ. 10 லட்சம் தானாம். அதுவும் சாப்ட்வேர் லைசென்ஸ்க்காக மட்டுமே செலவு செய்ததாக கூறப்படுகிறது. 95 நிமிட படத்திற்கு யு/ஏ சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்று யாரும் இல்லை. இசை அமைப்பாளர், ஒளிப்பதிவாளர் இல்லை. தணிக்கை குழுவும் படத்திற்கு அனுமதி அளித்துள்ளதால், வருங்காலத்தில் மேலும் பல ஏஐ படங்கள் வரும் என எதிர்பார்க்கலாம்.

வெளியானால், முழுக்க முழுக்க AI உருவாக்கிய உலகின் முதல் படமாக இது அமையும் என்கிறார் இந்தப் படத்தை உருவாக்கியவர் நரசிம்ம மூர்த்தி. ஆனால், 2024-ல் ‘Where the Robots Grow’ என்ற AI திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.