சென்னை : குணச்சித்திர நடிகர், வில்லன் கதாபாத்திரங்கள் நடித்து கதாநாயகனாக உயர்ந்த நடிகர் கரண் தான் 5 ரூபாய் உணவை சாப்பிட்டு கண்ணீர் சிந்தியது குறித்து நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
நடிகர் கரண் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நெகிழ்ச்சியாக நினைவுகூர்ந்துள்ளார். ‘கொக்கி’ பட ஷூட்டிங் ரோட்டுக் கடை ஒன்றில் சாப்பிடுவது போல ஒரு சீன். வெறும் 5 ரூபாய் கொடுத்து சாப்பிட்டேன்.
ருசியான சாப்பாட்டுக்காக நாம் எவ்வளவோ செலவழிக்கிறோம். ஆனால், இந்த 5 ரூபாய் சாப்பாட்டையும் சாப்பிட இத்தனை ஏழை மக்கள் இருக்கிறார்களே என நினைத்தேன். என் கண்கள் கலங்கிவிட்டன எனக் கூறினார்.
ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் பின்னர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் கரண். பின்னர் கதாநாயக உயர்ந்து பல வெற்றி படங்களையும் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.