முதன்முறையாக இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகர் கார்த்தி இணையும் புதிய திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில், குறிப்பாக நவம்பர் மாதத்தில் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுந்தர் சி தற்போது “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மாறுபட்ட கதைகளில் நடித்து வருகிற கார்த்தி தற்போது “சர்தார் 2” உள்பட சில படங்களில் பிஸியாக இருக்கிறார். அடுத்ததாக “கைதி 2” படத்திலும் அவர் ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்நிலையில், சுந்தர் சி இயக்கும் புதிய படத்தை கார்த்தியின் முன்னாள் படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், “பையா” மற்றும் “தோழா” படங்களுக்கு பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தமன்னா கார்த்திக்கு ஜோடியாக நடிக்கலாம் என்ற பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்தப் படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.