சூர்யா தற்போது ஆர்.ஜெ பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சூர்யா 45 என அழைக்கப்படும் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் ஜூலை 23 அன்று வெளியிடப்படுவதாக தகவல்கள் வருகின்றன. இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானால், அது சூர்யா ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில், கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தள்ளி போக வாய்ப்புகள் உள்ளன. இந்த படம் முதல் பாகத்தை போல தீபாவளிக்கு வெளியிடப்பட திட்டமிடப்பட்டது. ஆனால், சூர்யா 45 படம் தீபாவளிக்கு வெளியானால், கார்த்தியின் சர்தார் 2 படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று சொல்லப்படுகின்றது.
சர்தார் 2 திரைப்படம் பொங்கலுக்கு வெளியானால், அது கார்த்தி மற்றும் படக்குழுவினருக்கு மிகப்பெரிய ரிஸ்காக அமையும். ஏனென்றால், விஜயின் கடைசி படம் “ஜனநாயகன்” மற்றும் சிவகார்த்திகேயனின் “பராசக்தி” இப்படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ளன. இந்த இரண்டு படங்களின் வெளியீட்டுடன் சர்தார் 2-ன் அதே நாளில் வெளியானால், படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்பதில் சந்தேகமில்லை.
இதனால், சர்தார் 2 படத்தை பொங்கல் பண்டிகையில் வெளியிடுவது மிகப்பெரிய ரிஸ்காக இருக்கும் என்று நம்பப்படுகிறது.