கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படத்தை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். படத்தின் வெளியீட்டு தேதி நீண்ட காலமாக தெரியவில்லை. இப்போது படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கார்த்தியின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
‘வா வாத்தியார்’ படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடந்து வருகிறது. கார்த்தியின் காட்சிகள் முடிந்தாலும், மற்ற நடிகர்களின் காட்சிகள் இன்னும் படமாக்கப்பட வேண்டியுள்ளது.

அனைத்தையும் முடித்து டிசம்பர் 5-ம் தேதி வெளியிட படக்குழு கடுமையாக உழைத்து வருகிறது. மேலும், ‘கங்குவா’ படத்தின் தோல்வியால் ஏற்பட்ட பிரச்சனைகளால், படம் வெளியாகாமல் போகும் சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது எல்லாம் சரியாகி டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
‘வா வாத்தியார்’ படத்தைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ‘சர்தார் 2’ படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.