‘கேம் சேஞ்சர்’ படத்தின் தோல்வி குறித்து முதன்முறையாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. அந்தப் படம் மாபெரும் தோல்வியடைந்தது. இந்தப் படத்தின் கதை கார்த்திக் சுப்புராஜுடையது. ஷங்கர் தனது கதையின் அடிப்படையில் திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார்.

‘கேம் சேஞ்சர்’ படத்தின் தோல்வி குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பதாவது:- ஷங்கர் சாரிடம் முதலில் ஒரு சாதாரண ஐஏஎஸ் அதிகாரி கதையை சொன்னேன். ஆனால், அவர் அதை முழுவதுமாக வேறு துறைக்கு மாற்றினார். அந்த கதையில் பல எழுத்தாளர்கள் ஈடுபட்டதால் கதையும் திரைக்கதையும் முற்றிலும் மாறிவிட்டது. ‘கேம் சேஞ்சர்’ படம் வெளியாகும் நேரத்தில், அதைப் பாராட்டி கார்த்திக் சுப்புராஜ் ஒரு பதிவு போட்டிருந்தார். இந்த பதிலுக்காக தற்போது பலரும் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.