சென்னை. : எனது போனை யாரோ ஹேக் செய்து விட்டனர் என்று நடிகை கஸ்தூரி பதிவிட்டதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தனது செல்போனை யாரோ ஹேக் செய்து விட்டதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தளத்தில், “எனது செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதால் அதை பயன்படுத்த முடியவில்லை.
அதனால், வேறு செல்போனில் இருந்து இந்த தகவலை பதிவிடுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகும் நிலையில், அவருக்கு பலர் ஆதரவு தெரிவித்தும், பலர் விமர்சனம் செய்தும் வருகின்றனர்.
இருப்பினும் இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.