சென்னை: கீர்த்தி சுரேஷ் – சுகாஸ் நடித்த `உப்பு கப்புரம்பு’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
நடிகை கீர்த்தி சுரேஷ் கடைசியாக பாலிவுட்டில் வருண் தவானுடன் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து இருந்தார் மேலும் தமிழில் ரகு தாத்தா திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் அடுத்ததாக உப்பு கப்புரம்பு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் நேரடி ஓடிடி ரிலீஸாக வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் சுகாஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் வாரம் வெளியாக இருந்த நிலையில் படக்குழு கடைசி நிமிடத்தில் நேரடி ஓடிடி வெளியீடாக மாற்றிவிட்டனர்.
படத்தை அமேசான் பிரைம் வீடியோ மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளனர். திரைப்படம் வரும் ஜூலை 4 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் , தெலுங்கு, மலையாளம்,இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தை சசி இயக்க வசந்த் மரிங்கண்டி கதை எழுதியுள்ளார். இப்படம் 90 களில் நடக்கும் கதையாக அமைந்துள்ளது.