சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனியை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் டிசம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் கோவாவில் நடைபெறவுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். ‘தெறி’ படத்தின் ரீமேக்கான ‘பேபி ஜான்’ படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார்.
தமிழில் இவர் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ வெளியாகவுள்ளது. தெலுங்கில் வெளியான ‘மகாநடி‘ படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷும் ஆண்டனியும் கடந்த 15 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஒரே பள்ளியில் படித்த இருவரும் நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறியுள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷும் ஆண்டனியும் கொச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் ஒன்றாக படித்ததாக கூறப்படுகிறது. இருவரும் பள்ளி முதல் இன்று வரை காதலர்களாகவே பயணித்துள்ளனர்.
இந்நிலையில், இருவீட்டாரின் சம்மதத்துடன் கீர்த்தி சுரேஷ்-அந்தோணி திருமணம் வரும் டிசம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் கோவாவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டனியை பொறுத்தவரை கேரளாவில் உள்ள ரிசார்ட் உரிமையாளர் என்றும் துபாயில் தொழிலதிபர் என்றும் கூறப்படுகிறது.