நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன் மற்றும் தெரபிஸ்டாக பணியாற்றும் கெனிஷா பிரான்சிஸ் இடையே நட்பை மையமாகக் கொண்டு பல வதந்திகள் பரவி வருகின்றன. சமீபத்தில் கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றைப் பகிர்ந்ததையடுத்து, அவர் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் கிளம்பியது. ஆனால் கெனிஷா, “என் வயிற்றுக்குள் உணவு தான் இருக்குது! நான் கர்ப்பமாக இல்லை” என நேரடியாக விளக்கம் அளித்து அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

கெனிஷா கூறியதாவது, “என் ஸ்டோரி வேறு விஷயம் பற்றியது. அதைக் கொண்டு இப்படி பேசுவது தேவையில்லை” என்று தெரிவித்தார். இது அவரைச் சுற்றி எழுந்த கர்ப்பப் பேச்சு முதல்முறையல்ல. கடந்த ஜூன் மாதத்திலும் இதேபோன்ற வதந்திகள் கிளம்பியிருந்தன. அப்போது கூட அவர் “நான் கர்ப்பமாக இருப்பதாக பலரும் பேசுகிறார்கள், என் கையை கட்டிக் கொண்டே நிற்க அனுமதி வாங்க வேண்டுமா?” எனக் கேட்டு பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில், ரவி மோகன் ஸ்டூடியோஸ் வெளியிடும் ‘அம்மா பாட்டு’ என்ற இசை வீடியோவில் கெனிஷா பாடியுள்ளார். பாடலை எழுதியவர் ரவி மோகன். பாடலின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் வெளியாகியதும் ரசிகர்கள் “ரவிக்குள் இருக்கும் திறமை ஆச்சர்யம்!” என பாராட்டியூள்ளனர்.
இதற்கிடையில், சிலர் கெனிஷாவே ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி பிரிவுக்குக் காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் கெனிஷா அதனை மறுத்து, “நான் யாருடைய வாழ்க்கையிலும் இடையூறாக இருந்ததில்லை. கடவுள் பார்த்துக் கொள்வார்” என தனது ஸ்டோரியில் எழுதியிருந்தார். தற்போது ரவி மோகன் மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.