பிருத்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து சமீபத்தில் வெளியான “எம்புரான்” படத்திற்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதை பற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தில் மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் பல மொழிகளில் வெளியிடப்பட்டது.

ஆனால், படத்தில் குஜராத் வன்முறை சம்பவங்களை பதிவு செய்த காட்சிகள் இடம்பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் இந்துத்வா கட்சியாக வில்லனை சித்தரித்திருப்பதற்கு பாஜக, ஆர் எஸ் எஸ் தலைவர்கள் கடுமையாக கண்டித்து வருகின்றனர். இதன் காரணமாக, படத்தில் 17 காட்சிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “கலைப் படைப்புகளை மற்றும் கலைஞர்களை அழிக்க முயற்சிப்பது ஜனநாயக உரிமையை மீறும் செயல். ஜனநாயக சமூகத்தில் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்” எனக் கூறினார்.