மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ திரைப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதன் காட்சிகள் இந்துக்களை புண்படுத்தும் வகையில் இருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, படத்தில் இருந்து சில காட்சிகள் நீக்கப்பட்டு, மறு தணிக்கை செய்யப்பட்டுள்ளது. படத்தில் இருந்து சுமார் 17 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த சர்ச்சை குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ‘எம்புரான்’ படத்துக்கும், அதன் படைப்பாளிகளுக்கும் எதிரான வகுப்புவாத வெறுப்பு பிரச்சாரம் மிகவும் கவலையளிக்கிறது.

சர்வாதிகாரச் சின்னங்களுக்கு எதிரான எதிர்ப்பை ஒடுக்க அச்சுறுத்தல்கள், மிரட்டல் போன்ற போக்கு அதிகரித்து வருவதற்கு இது மற்றொரு உதாரணம். ‘எம்புரான்’ படத்தின் மறு தணிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிருத்விராஜ் இயக்கத்தில், மோகன்லால், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘எம்புரான்’. இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.