மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘எம்புரான்’ திரைப்படம். இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். மலையாள சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் பல மொழிகளில் வெளியிடப்பட்டது.

இந்த சூழ்நிலையில், குஜராத் வன்முறை சம்பவங்கள் தொடர்பான காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வில்லனை இந்துத்துவா கட்சியாக சித்தரித்ததற்காக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர். படத்தில் உள்ள 17 காட்சிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “கலைப்படைப்புகள் மற்றும் கலைஞர்களை அழிக்க முயற்சிப்பது ஜனநாயக உரிமைகளை மீறும் செயல். ஜனநாயக சமூகத்தில் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார்.