சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படம் நவம்பர் 14-ம் தேதி வெளியாகிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது. இதற்காக மும்பை மற்றும் டெல்லியில் நடந்த விளம்பர நிகழ்ச்சிகளில் சூர்யா கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் போது கேரளா எம்எல்ஏ ரமேஷ் சென்னிதாலாவை சூர்யா சந்தித்தார். இதுகுறித்து ரமேஷ் சென்னிதலா கூறுகையில், “டெல்லி விமான நிலையத்தில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் சூர்யாவை இன்று சந்தித்தேன்.
ஒரு நடிகராகவும், சமூகப் பொறுப்புள்ளவராகவும் அவருக்குத் தேவையான ஒரே ஆதாரம் அவருடைய ‘ஜெய் பீம்’ திரைப்படம்தான்! என்று தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ரமேஷ் சென்னிதலா கேரள காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர். அவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.