குஷ்பு சுந்தரின் அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியாவின் ஆர்.மதன் குமார் இணைந்து ஃபேண்டஸி காதல் காமெடி படத்தைத் தயாரிக்கிறார்கள். இதை அறிமுக இயக்குனர் அஷ்வின் கந்தசாமி இயக்குகிறார்.

இதில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இளம் ஆதித்த கரிகாலனாக நடித்த சந்தோஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ரேஷ்மா வெங்கடேஷ் நாயகியாக நடிக்கிறார். வினோத் கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன், ஜோர்ன் சராவ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
சாந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.