
தன் இரு பிள்ளைகளை நினைத்து மனவேதனையில் இருக்கும் ஆர்த்திக்கு, அவரது அம்மா சுஜாதா விஜயகுமாரின் நெருங்கிய தோழி நடிகை குஷ்பு இன்ஸ்டாகிராமில் ஒரு உணர்ச்சி மிக்க பதிவை வெளியிட்டு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆர்த்தி மற்றும் ரவி மோகன் பிரிந்த நிலையில், அவர்களின் வாழ்க்கை சம்பந்தமாக சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன.

ரவி, பாடகி கெனிஷா பிரான்சிஸுடன் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டபோது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் பரவலாக பரவியதுதான் இந்த விவாதத்துக்கு காரணம். இதில் யாருடைய பெயரும் குறிப்பிடாமல் குஷ்பு போட்ட இன்ஸ்டா பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒரு சிங்கம் தனது இரண்டு குட்டிகளுடன் இருக்கும் படத்துடன், குஷ்பு “வாக்குறுதி காப்பாற்றப்படாதபோது அவர் தன்னையே கேள்வி கேட்கிறார். காயம் கண்ணுக்கு தெரியாமல் உணர முடியும்போது எப்படி குணமாக முடியும்?” என்றார். மேலும், “அவரின் அர்ப்பணிப்பே அவளது உலகம், ஆனால் அதையே கொண்டாடுவேன் என்றவர் சோதிக்கிறார்” என மனம்விட்டுக் கூறியுள்ளார்.
இந்தப் பதிவை பார்த்த ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமாரும் “நல்லா சொன்ன” என கருத்து பதிவிட்டுள்ளார். இதன்மூலம் குஷ்பு தனது தோழியின் மகளுக்கு நேரடியான ஆதரவை தெரிவித்திருக்கிறார்.
ஆர்த்தி சமீபத்தில் அன்னையர் தினத்தன்று தனது பிள்ளைகளுக்காக உருக்கமான இன்ஸ்டா பதிவு ஒன்றையும் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.
ரவி மோகன் மற்றும் கெனிஷா பிரான்சிஸ் தொடர்பான புகைப்படங்கள் வைரலான பின்னர் ஆர்த்தி ஒரு அறிக்கையும் வெளியிட்டு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
இந்த நேரத்தில் குஷ்பு தனது மவுனத்தின் மூலம் ஆர்த்திக்கு உற்சாகமும், உறுதியும் தர முயன்றிருக்கிறார்.