சென்னை: நடிகையும், பாஜக அரசியல் பிரமுகருமான குஷ்புவின் எக்ஸ்-தள சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். நடிகை குஷ்பு எக்ஸ் தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். அவரது அரசியல் பதிவுகள் கவனத்தை ஈர்க்கின்றன.

இந்நிலையில் தற்போது தனது எக்ஸ்-தள கணக்கில் உள்ள மின்னஞ்சல் முகவரி மாற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரமுகர்கள் பொதுவாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார்கள். இந்த விஷயத்தில் குஷ்புவும் எக்ஸ்-தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். அவரது பதிவுகள் அவர் சார்ந்த அரசியல் கட்சியின் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன. இந்த நிலையில்தான் அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டது.